பி.இ., பி.எட்., பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை வெளியீடு
இளம் பொறியியல் (எந்த துறையும்) உடன் இளம் கல்வியியல் (இயற்பியல் அறிவியல்) பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை (நிலை) எண்.16, நாள் : 04-02-2025 வெளியீடு
பொறியியல் படிப்புடன் கூடிய பி.எட். (இயற் அறிவியல்) படிப்பு - பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்குத் தகுதி & 6-8 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க இணை அரசாணை வெளியீடு
பிஇ - பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு
பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.
இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment