பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் - Asiriyar.Net

Friday, July 18, 2025

பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்

 



சிவ​காசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்​கிய சம்​பவத்தை கண்​டித்​தும், பணி பாது​காப்பு கேட்​டும் ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சிவ​காசி அருகே திருத்​தங்​கல் எஸ்​.ஆர்​.என். அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் மது அருந்​தி​விட்டு பள்ளிக்கு வந்த மாணவர்​களை கண்​டித்த ஆசிரியர் சண்முக சுந்​தரத்தை நேற்று முன்​தினம் மாணவர்​கள் இரு​வர் பாட்​டிலால் தாக்கினர்.


ஆசிரியரை தாக்​கிய 2 மாணவர்​களை கைது செய்த போலீ​ஸார், சிறார் கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்த்​தனர். இதே பள்​ளி​யில் 2023 டிசம்​பரில் ஆசிரியரை 2 மாணவர்​கள் கத்தி மற்​றும் அரி​வாளால் தாக்​கியது குறிப்​பிடத்​தக்​கது.


இந்​நிலை​யில், பணி பாது​காப்பு கேட்டு பள்ளி முன்​பாக ஆசிரியர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மாவட்​டக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்​றும் போலீ​ஸார் ஆசிரியர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதையடுத்​து, பள்​ளிக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கப்​பட்​டது. மது அருந்தி விட்டு பள்​ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவர்​கள் 3 பேரை இடைநீக்​கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்​தர​விட்​டார்​.


No comments:

Post a Comment

Post Top Ad