தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. இடம் மாறுதல் கூறி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சீனிவாசன் என்பவர் இடமாறுதல் கோரி விண்ணப்பித்து இருந்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற கலந்தாய்வில் தனக்கு முன்னுரிமையில் அணிவிக்கப்பட்டது என்று கூறி தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார்.
அவர் தான் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்திய மற்ற ஆசிரியர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரை மீட்ட போலீசாரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் ஒருவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தற்கொலை முயற்சி மேற்கொண்டு உள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment