பதவி உயர்வு கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Asiriyar.Net

Friday, July 4, 2025

பதவி உயர்வு கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 




கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், தொடக்க கல்வித்துறையில், முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறையில், 2025 - 26ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை.


உபரி ஆசிரியர்கள், மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பதவி உயர்வுடன் கூடிய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். அதுவரை கலந்தாய்வை நடத்தக்கூடாது. 


பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளின் படி, பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணை செயலாளர் பாபு வரவேற்றார். அமைப்பின் மாவட்டத் தலைவர் ரங்கநாதமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் தங்கபாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


 

No comments:

Post a Comment

Post Top Ad