திமுகவில் ஆசிரியர்கள் கொண்ட "கல்வியாளர் அணி" என்ற புதிய அணி உருவாக்கம்! - Asiriyar.Net

Sunday, June 1, 2025

திமுகவில் ஆசிரியர்கள் கொண்ட "கல்வியாளர் அணி" என்ற புதிய அணி உருவாக்கம்!

 




புதிய சார்பு அணிகள் ! 

திமுகவில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ! 


ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி என்ற புதிய அணியும் உருவாக்கம் .


திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. மதுரையில் 48 ஆண்டுக்கு முன்பு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்த பொதுக் குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென புதிய சார்பு அணி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி தி.மு.கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23-ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad