தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள்களுக்கு 16.04.2024 அன்று பயிற்சி வகுப்பு - CEO Proceedings - Asiriyar.Net

Monday, April 15, 2024

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள்களுக்கு 16.04.2024 அன்று பயிற்சி வகுப்பு - CEO Proceedings

 

 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாள்: 15.04.2024


பள்ளிக்கல்வி - தேர்தல் - ஏப்ரல் 2024- பாராளுமன்ற தேர்தல் - பயிற்சி வகுப்பு - மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது - பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள்/கலந்து கொண்டவர்களுக்கு 16.04.2024 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தெரிவித்தல் மேற்பார்வையிடும் அலுவலர்கள் நியமித்தல் -தொடர்பாக.


பார்வையில் காணும் தொலைபேசி செய்திகளின் அடிப்படையில் 19.04.2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பணி ஆணை கிடைக்கப்பெற்று மூன்று கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 16.04.2024 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் ஏற்கனவே கலந்து கொண்ட மையத்திலேயே கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது/கலந்து கொள்ளாதவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post Top Ad