2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்க்கை பெற்ற (Fresh Students) SC/ST/SCC மாணவர்கள் Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதளம் 01.02.2024 முதல் திறப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சிரமமின்றி கல்வி பயில பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் "போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்", "ப்ரிமெட்ரிக் மற்றும் தூய்மை பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்", "மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்", "உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம்", "பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தலையாய திட்டங்களாகும்.
Click Here to Download - SC/ST/SCC - Pre Matric / Post Matric Scholarship - Pdf
No comments:
Post a Comment