Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, December 10, 2023

Half Yearly Examination 2023 - Revised Time Table Published (1 - 12th Std)

 

அரையாண்டுத் தேர்வு 2023 -  .புதிய கால அட்டவணை வெளியீடு. 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. டிச.,13 முதல் 22ம் தேதி வரை தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியானது. டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அதன்படி 6 முதல் 10ம் வகுப்பிற்கு திருத்தி அமைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளனர். அதன்படி 13ம் தேதி தமிழ், 14ம் தேதி விருப்பமொழி. 15ம் தேதி ஆங்கிலம், 18ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 21ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி சமூக அறிவியலுடன்10ம் வகுப்பிற்கு தேர்வுகள் முடிவடையும். 11ம் மற்றும் 12ம் வகுப்பிறகு டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13ல் தேர்வுகள் தெடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 















No comments:

Post a Comment

LightBlog