"ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் - Video Link - Director Proceedings - Asiriyar.Net

Monday, October 9, 2023

"ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் - Video Link - Director Proceedings

 

2023-24ம் கல்வியாண்டின் அறிவியல் மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி விரர்களுக்கான பாராட்டு விழாவினை அனைத்து பள்ளி மாணவர்களும் கண்டு களித்திடும் வகையில் திரையிட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் இந்நிகழ்வில் உள்ளூர் அறிவியல் அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளி சாதனைகளில் தமிழர்களின் பங்கு குறித்து உரைநிகழ்த்திடவும், மாணவர்களிடம் இந்நிகழ்வு குறித்து அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அக்டோபர் மாதத்திற்கான அறிவியல் மன்ற செயல்பாடுகளை " சந்திராயன் -3 திட்டமும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) சாதனைகளும்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் திட்டமிட்டு நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அரசு / அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் எதிர்வரும் 09.10.2023 அன்று தொடங்கப்படவுள்ள நிலையில். 10.10.2023 அன்று அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் இந்நிகழ்வினை திட்டமிட்டு திரையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தேவைப்படும் பள்ளிகளில் LCD Projector / Smart TV ஆகியவற்றை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் வாடகைக்குப் பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" நிகழ்வு திரையிடப்பட்டதை ஆவணப்படுத்தி, நிகழ்வு தொடர்பான அறிக்கையினை 10.10.2023 மாலை 05.00 மணிக்குள் desjdnss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இணைப்பு: " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" நிகழ்வின் காணொளி இணைப்பு
Click Here  - "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - Video Link 

Post Top Ad