அரசாணை ( நிலை ) எண் , 248 , உயர்கல்வி ( F2 08.11.2022 ன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 12/2019 . நாள் . 28.08.2019 மற்றும் 04.10.2019 ) ரத்து செய்யப்பட்டு தற்போது 4000 உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை ( Fresh Notification ) தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட வேண்டுமென ஆசிரியர் ஆணையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2331 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 12/2019 . நாள் . 28.08.2019 மற்றும் 04.10.2019 ) அரசாணை ( நிலை ) எண் . 248 , உயர்கல்வி ( F2 ) த்துறை , நாள் . 08.11.2022 ன்படி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment