2022-2023 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மலம் நியமனம் வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்காணும் அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு 01.10.2022 அன்று கலந்தாய்வு நடை பெறவுள்ளது . எனவே , மேற்கண்ட அரசாணையில் இடம் பெற்றுள்ள தலைமையாசிரியர்கள் தங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 01.10.2022 அன்று காலை 11 மணி அளவில் கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வில் கலந்து கொள்ளாத தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையரால் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment