G.O. (Ms) No: 62, Dated: 25-03-2022)
பள்ளிக் கல்வித் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் – தேர்வுத்துறை புதிய உத்தரவு.10, 11 & 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு
➤10ம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு
➤11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி
➤மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வெழுத வசதி
➤தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி
இதுபோன்ற முக்கிய பயனுள்ள அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார், இது கண்டிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
Click Here To Download - Concessions to Differently Abled - G.O.62 - Pdf
No comments:
Post a Comment