Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, October 4, 2020

முதன்மைக் கல்வி அலுவலருக்கு கொரோனா

 



தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது. தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராக என்.கீதா ( 55 ) பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு , கோவையிலிருந்து பணியிட மாற்றம் பெற்று தருமபுரியில் பணியாற்றி வருகிறார். கடந்த செப் .31 - ஆம் தேதி இவருக்கு சளி , காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 



இதில் அக் .1 - ஆம் தேதி அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் , தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.






No comments:

Post a Comment

LightBlog