TODAY RASIPALAN - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 15, 2019

TODAY RASIPALAN


*🕉🕉🕉இன்றைய ராசிபலன்*

*செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019*

*மேஷம் aries-mesham*

தங்கள் சம்பாத்திய நிலை போதுமான அளவு உயரும். கடினம் என நினைத்த செயல்களைக் கூட எளிதாக, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.

*ரிஷபம் taurus-rishibum*

உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்குக் கடின உழைப்பு தேவை.

*மிதுனம் gemini-mithunum*

புதிய திட்டங்களால் வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். வாகன யோகம் உண்டு. பயணங்களால் நற் பலன்கள் ஏற்படும்.

*கன்னி virgo-kanni*

விருப்பத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் எல்லாம், நேர்மாறாக நடக்கும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடக்கவும்.

*மகரம் capricorn-magaram*

தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.

*கடகம் cancer-kadagam*

மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி காரணமாகத் தனலாபம், ஏற்படும்.

*சிம்மம் leo-simmam*

தீர்த்த யாத்திரைகள், கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு உண்டு.

*துலாம் libra-thulam*

புதிய வாய்ப்புக்கள் கதவைத் தட்டும். பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.

*மீனம் pisces-meenam*

தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.

*தனுசு sagittarius-thanusu*

கடினமாக உழைத்தாலும், அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

*விருச்சிகம் scorpio-viruchagam*

தனலாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த கணவன் மனைவி இணைந்து மகிழ்வர். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.

*கும்பம் aquarius-kumbam*


மனதில் மகிழ்ச்சி பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசத்தைப் பொழிவீர்கள். மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள். அதன் காரணமாகத் தன்னம்பிக்கை கூடும்.

*SRI🇮🇳செய்திகுழுமம்*

Post Top Ad