Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, June 16, 2019

தண்ணீர் பற்றாக்குறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும் என  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபி அருகே உள்ள நம்பியூரில் மாணவர்களுக்கு இலவச ேலப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் எந்த பள்ளியிலும் குடிநீர் பற்றாக்குறை இல்லை. குடிநீர் தட்டுப்பாடு என்ற தகவல் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை. அது போன்ற நிலை குறித்து தகவல் வந்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும். காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கு இன்று விடுமுறை தினம் என்பதால்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் இல்லை. 

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


LightBlog