அறிவியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - Asiriyar.Net

Saturday, September 1, 2018

அறிவியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இமையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை)

காலியிடங்கள்: 202

வயதுவரம்பு: 01.07.2018 அன்று 20 வயது நிறைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.


தகுதி: பல்கலைக்கழக மாணிய குழுவினல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2+3 என்ற அடிப்படையில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600





தேர்வுக் கட்டணம்: ரூ.500. பொதுப்பிரிவு மற்றும் துறைத் தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.1000 செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி மூலம் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்கூறு தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbonline.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad