Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, November 1, 2026

Society Loan - பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை செலுத்துதல் தொடர்பாக இணைப்பதிவாளர் கடிதம்




கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் தொடர்ந்து தவணைத் தொகை பிடித்தம் செய்ய கோரியது- தொடர்பாக.

பார்வை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானம் நாள்:05.09.2026 (இவ்வலுவலகத்திற்கு பெற்றப்பட்ட நாள்.19.09.2026)


பார்வையில் காணும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை முழுமையாக செலுத்திட நிர்பந்தித்திடாமல் பணிமாறுதல் பெற்றுச் செல்லும் ஒன்றியத்தில் நிலுவை தவணை தொகையை தொடர்ந்து பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இந்நேர்வில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் செலுத்தி முடியும் வரை இயற்கை நியதியின் அடிப்படையில் அவர்கள் கடன் பெற்ற கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்திலேயே தொடர்ந்து தவணை தொகையை செலுத்தவோ அல்லது தனியரது விருப்பத்தின் அடிப்படையில் கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்டு பணிமாறுதலில் செல்லும் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் புதியதாக கடன் பெற்றுக்கொள்ளவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment

LightBlog