தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை களஞ்சியம் (Kalanjiyam App) அல்லது IFHRMS தளத்தில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி, அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன்படி, அரசு ஊழியர்கள் தங்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் குறித்த விவரங்களை, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டமான IFHRMS இணையதளம் வாயிலாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
• முந்தைய கடைசி தேதி: அக்டோபர் 31, 2026
• புதிய கடைசி தேதி: டிசம்பர் 31, 2026
Property Filing Extension of Time Limit - Gov't Letter - Pdf 👇👇👇


No comments:
Post a Comment