Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, October 5, 2026

TNPSC Group 4 - தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது - கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படுமா?




இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கும் சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பபடுகிறது. நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஆண்டு கால அட்டவணைப்படி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்​வில், இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் (கிரேடு-3), கிராம நிர்​வாக அலு​வலர், வரை​வாளர், பில் கலெக்​டர், வனக்​காவலர் உள்​ளிட்ட பதவி​கள் இடம்​பெறும். எஸ்​எஸ்​எல்சி தகுதி: குரூப்-4 தேர்வை பொருத்​தவரை​யில் பெரும்​பாலான பதவி​களுக்கு அடிப்​படை கல்​வித்​தகுதி எஸ்​எஸ்​எல்சி தேர்ச்சி ஆகும்.

கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படுமா?
குரூப்-4 தேர்​வுக்கான அடிப்படை கல்​வித்​தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்றாலும் முதுகலை பட்​ட​தா​ரி​களும், பட்​ட​தா​ரி​களும்தான் அதிக எண்​ணிக்​கையில் விண்​ணப்​பிக்​கி​றார்கள் . 

கடந்த குரூப்-4 தேர்​வுக்கு 13.89 லட்சம் பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர். எனவே இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கும் சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1, குரூப் 2 பணியிடங்களில் காலியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். எனவே, குரூப் 4 அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


No comments:

Post a Comment

LightBlog