* G.O.243 ரத்து செய்யப்பட வேண்டும் / மாவட்ட முன்னுரிமை என்று மாற்ற வேண்டும்
* பணி நியமன முன்னுரிமைப்படி, TET தேர்ச்சி பெறும் தேதிக்குப் பின்னரே Promotion Fixation என்ற நிபந்தனையோடே பதவி உயர்வு வழங்கப்படும் என்பதை மாணவர் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.
* SGT -> PHM -> BT என்ற அறமற்ற பதவி உயர்வுத் திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும்.
* PHM & BTயின் MHM பதவி உயர்வை 1:1 என்று மாற்ற வேண்டும்.
* ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 என்றாவது குறைக்க வேண்டும்.
* ஆசிரியர்களுக்கான தீர்ப்பாய முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, வழக்குகள் குவிவதைக் குறைக்க வேண்டும்.
* இதையெல்லாம் அரசிடம் வழியுறுத்த தொடக்கக் கல்வித்துறை சங்கங்கள் ஒருமனப்பட வேண்டும்.
* அதற்கு முதலில் காலிப்பணியிடங்களை நிரப்புவதே இன்றைய உடனடித்தேவை என்பதையும், அதற்குத் தடையாக உள்ள விடயங்களை வழக்குகள் / ஆட்சியாளர்களால் அல்லாது சங்கங்கள் துணிவுடன் களத்தில் இறங்கினால் மட்டுமே எதிர்கொண்டு வெல்லமுடியும் என்பதையும் சங்கத் தலைமைகள் உணர முன்வர வேண்டும்.
*பின்குறிப்பு :*
பொதுத்தேர்வு / போட்டித் தேர்வு / நியமனத் தேர்வு போன்றவற்றின் வெற்றி என்பது அறிவுடமைக்கான அளவோ அழகோ அல்ல. அஃது குறிப்பிட்ட பாடப்பொருள் சார் நினைவாற்றலுக்கான அவ்வப்போதைய அளவீடு மட்டுமே. காலங்கழிய தானேகழியும்.
எப்போதும் அறத்தின் வழி நிற்பது மட்டுமே அறிவுடமைக்கான அழகு.
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_



No comments:
Post a Comment