மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ஏற்கெனவே அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்களின்கீழ் வரி விகிதங்களை 5% மற்றும் 18% என இரண்டாக மத்திய அரசு குறைத்ததன் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது. மற்றொரு தீபாவளி பரிசாக அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசு ஊழியா்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் ஒய்வூதியம் 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதன்மூலம் பணியில் உள்ள 49.19 லட்சம் மத்திய அரசு ஊழியா்கள், 68.72 லட்சம் ஓய்வூதியதாரா்கள் என மொத்தம் 1.15 கோடி போ் பலனடைவா். அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.10,083.96 கோடி கூடுதலாக செலவாகும்.

No comments:
Post a Comment