11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - முழு விபரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 2, 2023

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - முழு விபரம்

 

அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது . 


அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் . இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ .10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் 


தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும் . ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும் , முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . 


முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் , இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும் . 18.08.2023 . 23.09.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு 2023-2024 . ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் , விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . 


மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 வரை பதிவிறக்கம் செய்து . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ .50 / - சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . 


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் .18.08.2023





Post Top Ad