ரூ.1,699 - க்கு அனைத்தும் 1 வருடத்திற்கு இலவசம் - ஏர்டெல் அதிரடி சலுகை அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, January 22, 2019

ரூ.1,699 - க்கு அனைத்தும் 1 வருடத்திற்கு இலவசம் - ஏர்டெல் அதிரடி சலுகை அறிவிப்பு




ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகை ஜியோவின் வருடாந்திர சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, எஸ்.எம்.எஸ். சலுகை தவிர ஏர்டெல் டி.வி. செயலியின் பிரீமியம் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.


ஏர்டெல் அறிவித்துள்ள புதிய சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், புதிய சலுகை அந்நிறுவன வலைதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

ஜியோ வழங்கும் வருடாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

Post Top Ad