Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, December 7, 2018

8ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்


எட்டாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களும், தற்போது பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்து தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோரும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.  11ம் தேதி முதல் 13ம் தேதி வரை www.dge.tn.gov.in இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக, ₹125, சிறப்புக் கட்டணம் ₹500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ₹50, என மொத்தம் ₹675 சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பள்ளியின் மாற்றுச் சான்று நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்று நகல், இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுத விரும்புவோர், மதிப்பெண் சான்றுகளின் நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட தேர்வுத்துறை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 
LightBlog