செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையால், கடந்த 22-ந்தேதி விடப்பட்ட விடுப்புக்கு ஈடாக சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று தேர்தல் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. இதற்காக நியமனம் செய்யப்பட்டு உள்ள தொடர்புடைய ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார். இந்த சூழலில், பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment