தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பணியாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜூனில் நடக்கவிருந்த துறை தேர்வுகள், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டன.
இந்த தேர்வுகள், ஆகஸ்டில் நடத்தப்பட உள்ளன.இந்த தேர்வுக்கு கணினி வழியில், கொள்குறி வகை வினாத்தாளும், விரிவான பதில் அளிக்கும் வகையில் வினாத்தாளும் அமைக்கப் படும். ஆக., 16, 17, 18, 23ம் தேதிகளில், கொள்குறி வகை தேர்வும், ஆக., 24 முதல், 27 வரையில் மற்ற தேர்வும் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment