மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் வழிகாட்டு மையம் தொடக்கம் - அரசு அதிரடி - Asiriyar.Net

Wednesday, June 16, 2021

மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் வழிகாட்டு மையம் தொடக்கம் - அரசு அதிரடி

 




தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது.


 இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.


இந்நிலையில் நெல்லையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9342033080 என்ற எண்ணில் தங்களது சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad