படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Asiriyar.Net

Tuesday, October 23, 2018

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெற்றோர் இறந்ததால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. தாய் தந்தை மறைவுக்குப் பிறகு, தன்னுடைய சகோதரர் ஹரிபிரசாந்த்தை படிக்க வைப்பதற்காக, கல்லூரி படிப்பினை நிறுத்தி விட்டு, கூலி வேலைக்குச் சென்றார். மாணவியின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.


இந்நிலையில் மாணவியின் பேட்டியை ஊடகங்களில் கண்டதாகவும், அவர் படிப்பை தொடரவும், அவருடைய சகோதரர் ஹரிபிரசாந்த் தாளவாடி உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவரும் தொடர்ந்து படிப்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றும், இதற்கான உத்தரவை தான் பிறப்பித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Post Top Ad