“இது தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே”,” Result எதுவானாலும் அதுவே முடிவல்ல” - முதல்வர் மு.க.ஸ்டாலின் - Asiriyar.Net

Thursday, May 8, 2025

“இது தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே”,” Result எதுவானாலும் அதுவே முடிவல்ல” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 




தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “PlusTwo தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.


தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்! “இவ்வாறு தெரிவித்தார். அதே போல் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.


முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள்.”இவ்வாறு தெரிவித்தார்.


பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்!


No comments:

Post a Comment

Post Top Ad