G.O 86 - அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள், அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க உத்தரவு - அரசு ஆணை - Asiriyar.Net

Friday, June 4, 2021

G.O 86 - அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள், அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க உத்தரவு - அரசு ஆணை

 



அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஆணை.


கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி, மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் முட்டையையும் சேர்த்து வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.



இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தலா 10 முட்டைகளுடன் சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவு அதிமுக ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது திமுக தலைமையில் ஆட்சி அமைந்திருப்பதால் மாணவர்களுக்கு வழங்கப்படும் உலர் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையில், சத்துணவு திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான உலர் பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து 10 முட்டைகளை வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் பொருட்கள் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.















No comments:

Post a Comment

Post Top Ad