அரசு பள்ளியில் படித்தால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம்! புதிய விதி வருமா? - Asiriyar.Net

Saturday, September 28, 2019

அரசு பள்ளியில் படித்தால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம்! புதிய விதி வருமா?




அரசு மருத்துவ கல்லூரி என்பது குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த கல்லூரிகளில் தனியார் பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் படித்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து பயன் அடைகின்றனர்.


அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் மெடிக்க படிக்க லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் கல்லூரிகளில் சேர வேண்டிய நிலை உள்ளது

இந்த நிலையில் அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன? என நீதிபதி கிருபாகரன் கேள்வி அவர்கள் எழுப்பியுள்ளார்.

உண்மையில் இதுபோன்ற ஒரு விதியை அரசு கொண்டு வந்தால் பெரும்பாலான அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad