அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் - கல்விநிலை அறிக்கையில் தகவல் - Asiriyar.Net

Wednesday, January 16, 2019

அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் - கல்விநிலை அறிக்கையில் தகவல்

நாட்டில் உள்ள 56 சதவீத 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணக்கு கூட தெரியவில்லை என ஆண்டு கல்விநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு கல்விநிலை அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 56 சதவீதம் 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் போன்ற அடிப்படை கணக்குகள் கூட தெரியவில்லை. 5 ம் வகுப்பு படிப்பவர்களில் 72 சதவீதம் பேருக்கு எளிய வகுத்தல் கணக்குகள் கூட தெரியவில்லை. 70 சதவீதம்3 ம் வகுப்பு மாணவர்களுக்கு கழித்தல் கணக்குகள் தெரிவதில்லை. நமது மாணவர்கள் ஒரு விஷயத்தை வாசிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

தேசிய அளவில் 8 ம் வகுப்பு படிக்கும் 4ல் ஒரு குழந்தைக்கு வாசிக்கும் திறன் இல்லை. 2008 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.8 சதவீதம் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்க தெரிவதில்லை.

2018 ல் பள்ளி படிப்படை பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 72.8 சதவீதமாக உள்ளது. கணித அறிவை பொருத்தவரை மாணவர்களை விட மாணவிகள் பின்தங்கி உள்ளனர். 44 மாணவிகளும், 50 சதவீதம் மாணவர்களும் மட்டுமே கணக்குகளை சரியாக போடுகிறார்கள்.

அதேசமயம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் கணக்கில் சிறப்பாக உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 5.5 லட்சத்திற்கும் அதிகமான 3 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

Post Top Ad