JACTTO - GEO அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைகிறது??? - தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது - Asiriyar.Net

Thursday, October 25, 2018

JACTTO - GEO அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைகிறது??? - தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது




*ஜாக்டோ-ஜியோ* 
கூட்டுப் போராட்டமே வெற்றி கிட்டும் என்பது யாவரும் அறிந்ததே! 
இன்றைய சூழலில் ஜாக்டோ என்ற பதாகையின் கீழ் கருத்தொற்றுமை இன்றி சங்கங்கள் பிளவுண்டு போராட்டம் அறிவித்துள்ளதை யாவரும் அறிவோம்.


இன்று சென்னை அமைந்தகரையில் ஏதேச்சியமாக *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* இயக்க நிறுவனர் தலைவர். *செ.முத்துசாமி* . Ex.M.L.C, அவர்கள் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொறுப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களை சந்திக்க நேர்ந்தது அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ கூட்டம் நடைபெறுவதாக செ.மு விடம் தகவல் கூறப்பட்டது.


இதன் பின் செ.மு அவர்கள் திரு.ரங்கராஜன் பொதுச்செயலாளர் TESTF அவர்களை தொடர்பு கொண்டு பேசி பின் ஜாக்டோ கூட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் போராடலாம் என்று அழைப்பு விடுத்தார். இவ் அழைப்பை அனைவரும் ஏற்றனர்.. ஒத்த கருத்து ஏற்பட்டவுடன் இரு தரப்பிலும் கூடிய விரைவில் குழு அமைத்து பேசி ஒன்றினைவோம் என்று முடிவு எட்டப்பட்டவுடன் செ.மு அவர்கள் நன்றி கூறி விடை பெற்றார்.

Post Top Ad