'DIKSHA APP, QR CODE ' வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறதா ? - பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு - Asiriyar.Net

Friday, September 21, 2018

'DIKSHA APP, QR CODE ' வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறதா ? - பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு


புதிதாக மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டத்துக்கு, 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்தப்படுகிறதா என்பதை, கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது. ஒவ்வொரு பாடத்திற்கும் பிரத்யேகமாக, க்யூ. ஆர்., கோடு அச்சிடப்பட்டுள்ளதோடு, பாடக்கருத்துகள் சார்ந்த கூடுதல் தகவல்களை, பதிவிறக்க வசதி உள்ளது.


'தீக் ஷாஆப்' மூலம், வீடியோ கருத்துகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல்பருவ பாடத்திட்டம் கையாளப்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், இரண்டாம் பருவ பாடப்புத்தகம் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்.

Post Top Ad