வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் (நவ.9) திங்கட்கிழமை அரசு விடுமுறை தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்று தீபாவளி ஆகும். இப்பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு வசதியாக சிறப்பு, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, மறுநாள் (நவ.9) திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment