தொடக்கக் கல்வி - 2026-27 ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவத் தேர்வின் மதிப்பெண்கள் EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து,
2026-27 ஆம் கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1. அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும்.
2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் முதல் பருவ மதிப்பெண்களை (100 மதிப்பெண்கள்) பாடவாரியாக அக்டோபர் 09ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது.
3. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஏற்கெனவேஉள்ள நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களின் மதிப்பெண்களை அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் EMIS தளத்தில் தவறாமல் உள்ளீடு செய்திடல் வேண்டும்.
4. அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இவ்விவரங்களை தெரிவிக்குமாறும், ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி, மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


No comments:
Post a Comment