காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 29, 2023

காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

 நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படமால் இருந்து வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிடர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் விலை குறைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தில் கீழ் 10 கோடி எரிவாயு இணைப்பு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளனர். 


2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த போது ரூ.417ஆக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1118ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்திய பாஜக அரசு தற்போது ரூ.200 மட்டும் குறைத்துள்ளது. 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Post Top Ad