எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா? ஆசிரியர்கள் அதிருப்தி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 22, 2023

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!

 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்காக... எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா?...- Should teachers play aboriginal characters in practice for numeracy curriculum? - AIFETO - 22.05.2023


AIFETO..22.05.2023


தமிழக ஆசிரியர் கூட்டணி. அரசு அறிந்தேற்பு எண்:36/2001.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்காக... எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா?...


ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியினை நடத்தி விட்டார்கள். அச்சடித்த புத்தகத்தையே கையில் எடுக்காமல் நடத்தினார்கள். வாசிப்புத் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் பேச வேண்டுமானால் இதுதான் உண்மை.*


கல்வியாளர்கள் எங்களைப் போன்ற மூத்த ஆசிரியர்கள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தோம்!. நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டாம். அப்படி நடைமுறைப்படுத்தினால் ஆறாம் வகுப்பிற்கு செல்லும்போது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு செய்து நாங்கள் தெரியப்படுத்தி இருந்தோம்!.. ஆனாலும் பிடிவாதமாக நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டது.


அதற்கான பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.


*lமாநில அளவில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சியில் பெண் ஆசிரியர்களும், ஆண் ஆசிரியர்களும் இலை தழைகளை உடுத்திக் கொண்டு ஆதிவாசிகளைப் போல்...


ஜிம் ஜிம் ஜிம்ப்பா!!

ஜிம் ஜிம் ஜிம்ப்பா!!

ஜிம் ஜிம் ஜிம்ப்பா!!


என்று கத்திக் கொண்டு நடனம் ஆடுவதை பார்த்து நெஞ்சம் பதை பதைக்கிறது.


எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.... என்று இன்னமும் போற்றி வணங்கப்படுகிறது. ஆனால் அவர்களை ஆதிவாசிகள் போல் நடனமாட செய்துள்ளார்கள். SCERT சார்பில் ஆட வைத்து வீடியோ எடுப்பதையும் பார்க்கிறோம்.


நல்ல வேளை ஆதிவாசிகளுக்கு அந்த காலத்தில் உடைகள் இல்லை. இலைகள், மரப்பட்டைகள், விலங்கின் தோல் மட்டும்தான் உடுத்தி வந்தார்கள். எங்கள் ஆசிரியர்களின் மானம் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை எண்ணி ஆறுதலுறுகிறோம். வகுப்பறையில் யாராவது ஒரு மாணவன் ஆதிவாசிகள் அந்தக் காலத்தில் இப்படித்தான்? ஆடை உடுத்தி இருந்தார்களா?.. என்று கேட்டால் என்ன பதில் சொலவது?...


ஒரு பாடத்தை நடத்தும் போது ஆர்வமூட்டுவதற்காக இது போன்று பல்வேறு தோற்றங்களில் ஆட வைத்துப் பார்ப்பது தான் SCERT க்கு அழகா?...


இப்படி பல்வேறு தோற்றங்களில் ஆசிரியர்கள் ஆடுவதால் மாணவர்களுடைய வாசிப்புத் திறன் மேம்பட்டு விடுமா?.. பாடப் பொருளின் விசாலமான பார்வையும் அவர்களுக்கு கிடைத்து விடுமா?..


அந்த நடனத்தில் ஆடக்கூடிய ஆசிரியர் சகோதரி ஒருவர் தானாகவே எழுந்து உட்கார முடியாத நிலையில் இருக்கக்கூடியவரையும் ஆடச் செய்து பார்க்கிறார்கள்.


இனிமேல் மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சிக்கு ஆசிரியர்கள் இலை தழைகளுடன் தான் வர வேண்டுமா?... இந்த பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பொழுது அவர்களும் இலை, தழைகளுடன் மேக்கப் செய்து ஆசிரியரோடு சேர்ந்து ஆட வேண்டுமா?..


இதுதான் நான்கு ஐந்து வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியா?.. அடுத்து மலைவாசிகள் பாட அறிமுகத்திற்கு குறவன், குறத்தி போல் வேடமணிந்து டப்பா கூத்து நடனம் ஆட வேண்டுமா?.. இதையெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கே மனம் வேதனையுறுகிறது.


ஒரு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ஆடியதைப் போல், இந்த பயிற்சியை வடிவமைத்துள்ள SCERT பேராசிரியர்கள், DIET முதல்வர்கள், விரிவுரையாளர்கள் முன்னுதாரணமாக இது போன்ற தோற்றங்களில் முதலில் ஆடியும், நடித்தும் காட்டுவார்களா?....


ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட இருக்கிறது. பாடப்புத்தகங்கள் நலத்திட்டங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் வகுப்பறையில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை.


முதலில் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள்!..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் நாங்கள் தெரிவிப்பதெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளால் கற்றல் கற்பித்தல் திறன் மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை!...


திராவிட மாடல் ஆட்சியில் ஆறாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள். ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்திற்கும் அவர்கள் படித்து வந்த எண்ணும் எழுத்துக்கும் தொடர்பே இல்லாமல் பள்ளியை விட்டு விலகும் சூழல் கூட ஏற்படலாம்... நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அந்த நிதி ஒதுக்கீடுக்கு ஏதாவது



Post Top Ad