8th Pay Commission - விரைவில் நல்ல செய்தி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 25, 2023

8th Pay Commission - விரைவில் நல்ல செய்தி

 



மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய, முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. சமீபத்தில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. விரைவில் ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கப்படும். இது குறித்து, இன்னும் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை, எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தற்போது அனைத்து மத்திய ஊழியர்களும் 8வது சம்பள கமிஷனை கோரி வருகின்றனர். 8 ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 


தற்போது அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஏழாவது ஊதியக்குழு மூலம் அகவிலைப்படி மற்றும் பிற ஊதிய கொடுப்பனவுகளை பெறுகிறார்கள். இந்தியாவில் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அமலில் உள்ளது. எனினும் 8 ஆவது ஊதியக் குழு குறித்த விவாதமும் இப்போது தொடங்கியுள்ளது. அதை விரைவில் அமல்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 


2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இது வரை அரசு அதிகாரப்பூர்வமாக இது பற்றி எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், புதிய ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 


விரைவில் அதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட அரசு வெளியிடலாம். தேர்தலுக்கு முன் இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டால், தற்போதைய ஆட்சிக்கு பெரிய பலன் கிடைக்கும். இவற்றின் மூலம் ஊழியர்களின் ஆதரவும் நடப்பு அரசாங்கத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அடுத்த ஊதியக்குழு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவருமா இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


8வது சம்பள கமிஷன்


அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அரசு அறிவித்தால், 2026 ஆம் ஆண்டுக்குள் அதை அமல்படுத்தலாம். ஏனெனில் அறிவிப்பு வெளியானவுடன் அனைத்து மத்திய ஊழியர்களும் அதிகரித்த சம்பளத்தைப் பெற முடியாது. இந்த முழு செயல்முறையும் அமலுக்கு வர சில காலம் தேவைப்படும். ஆகையால், இந்த முழு செயல்முறை அமலாக்கத்துக்கு வர தாமதம் ஆகும், ஆனால், அதன் படி அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும்.


இந்தியாவின் சில பகுதிகளில், 8 ஆவது ஊதியக் கமிஷன் தொடர்பாக அரசாங்கத்திடம் பெரிய அளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. விரைவில் அனைத்து மத்திய ஊழியர்களும் சமூக ஊடகங்கள் மூலமும் இதை கோராலாம் என்றும் கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 8 ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அப்படி நடந்தால், அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தில் பெரிய நன்மை கிடைக்கும்.


8வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும்?


அடுத்த 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படலாம். அப்படி அமைக்கப்பட்டால், அது அடுத்து வரும் 2 ஆண்டுகளில் அதாவது 2026-ம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும். அதன் பிறகு மத்திய ஊழியர்களின் சம்பள உயர்வு இருக்கும். ஏழாவது ஊதியக்குழுவில் வழங்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 8வது ஊதியக்குழுவில் பல முக்கிய மாற்றங்களுடன் சம்பள உயர்வு இருக்கும். இதில் மேலும் பல சலுகைகள் சேர்க்கப்படவுள்ளதால், அனைத்து மத்திய ஊழியர்களும் ஏராளமான சலுகைகளை பெற உள்ளனர். 


8வது சம்பள கமிஷன் வருமா வராதா?


தற்போது எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படுமா என்பது ஊழியர்கள் மத்தியில் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான பரிசீலனை எதுவும் இல்லை என அரசாங்கம் சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும், இதை அரசாங்கம் தற்போது பரிசீலிக்கக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 


 இப்போது அரசாங்கம் புதிய அளவிலான சம்பள உயர்வை பரிசீலிக்க நேரம் கிடைத்துள்ளது. அதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விரைவில் இது ஒரு புதிய வழியில் உருவாகும் என்றும் இதற்கு 2024 ஆம் ஆண்டு சரியான நேரம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். 


Post Top Ad