கணித ஆசிரியர்கள் மாஸ்டர்களாய் தலை நிமிர போவது எப்போது ? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 18, 2023

கணித ஆசிரியர்கள் மாஸ்டர்களாய் தலை நிமிர போவது எப்போது ?

 




கணிதமும் பாடத்திட்ட அமைப்பும் ...

உலகமே கணிதத்தால் இயங்குவது.

கணிதம் இல்லையேல் எதுவுமில்லை.


கணித ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு பெயர் மாஸ்டர் .

ஒரு பிள்ளைக்கு கணிதம் பிடித்து போக நிச்சயம் புரியும் படி சொல்லி தரும் கணித ஆசிரியர் அமைவது அவசியம்.


ஆனால் இவை எல்லாம் 2010 ஆண்டுகளில் நடந்தவை.

2010 க்கு பிறகு கணித கற்பித்தல் என்பதே சவாலாக மாறியுள்ளது.

நூற்று கணக்கான கணித நுண் கூறுகளை மாணவர்கள் மனதில் வைத்து கொண்டால் இதை விட எளிய பாடம் ஏதும் இல்லை.

ஆனால் காலம் மாற மாற புரிதலுடன் கூடிய கற்றல் குறைந்து வருகிறது.


ஒரு கணக்கினை புரிந்து கொள்ள 15 நிமிடம் எடுத்து கொள்கிறது. Instant முறையில் மனனம் செய்ய 5 நிமிடம் போதும்.


பிள்ளைகள் இந்த Instant மனநிலையிலே உள்ளனர்.


நடத்தியதும் எளிதாக புரிந்து போகும் கணக்கு கூட பயிற்சி எடுக்காமல் விடுவதால் மனப்பாடம் செய்து சிறு தேர்வுகள் எழுதி விடுவதால் 3 மாதத்தில் மேல் மனதிலே அவை விலகி விடுகிறது.


சமச்சீர் கல்வி பாடத்திட்டமே கணித ஆசிரியர்களுக்கு சவாலாக பார்க்கப்பட்டது.


பல்வேறு shortcut உருவாக்கப்பட்டு மாணவர்களை கரை ஏற்றினோம்.


புதிய பாடப்புத்தகமும் - அதில் வழங்கப்பட்டுள்ள பயிற்சி கணக்குகளும் தொடர்பற்ற நிலையில் கிடக்கின்றன.


ஒவ்வொரு கணக்கும் ஒவ்வொரு Type என தொடர்பியல் முறைகளை பயன்படுத்தவே முடியவில்லை.


இருக்கும் பாடத்திட்டத்தை PET பாட வேளை / Free பாட வேளை / காலை / மாலை / சனி / ஞாயிறு என ஓடி ஓடி எடுத்து அப்பாடா என அமரும் போது ஜனவரியை தொட்டு விடுகிறோம்.


தேர்வு வைத்தால் பாதி மறந்து கிடக்கிறது .  எத்தனை திருப்புதல் செய்தாலும் கணிதத்தில் மட்டும்


மெல்ல மலரும் மாணவர் பட்டியல் குறைந்த பாடில்லை.


அரையாண்டிற்கு நடத்தியது திருப்புதலில் 1 ல் மறந்து விடுகிறான்.


திருப்புதல் 1 ல் நடத்தியது திருப்புதல் 2 ல் காணவில்லை.


அப்பாடா 3வது திருப்புதலாவது முழு தேர்ச்சி என்றால் மீண்டும் முதலில் இருந்த நிலை.


எத்துனை மெடிரியல், எத்துனை வினாத்தாட்கள், எத்துனை சிறப்பு வகுப்புகள்.


இத்துனையும் கடந்து தேர்வு வினாத்தாள் வரும் போது - இருப்பதிலே எதிர்பாராத வினாக்களை தொகுத்தவாறு வினா வடிவமைப்பு அமையும்.


இரு ஆசிரியர்கள் வேலையை ஒரு கணித ஆசிரியர் செய்தாலும் பலன் என்னவோ பாஸ் மார்க் தான்.

மிக முக்கிய வினா எது என கூறவோ வழி இல்லை.


கூறினாலும் 100 வினாக்கள் வழங்கினால் 10 வினாக்கள் கூட கடப்பதில்லை. 


மற்ற பாட ஆசிரியர்கள் உங்களுக்கு என்னப்பா கிராஃப் ஜியாமெட்ரிலயே பாஸ் பன்னிடுவிங்க எனும் போது வர ரியாக்சன் இருக்கே 🥵


தமிழில் படிவம், கடிதம் , செய்யுள், திருக்குறள்


ஆங்கிலம் Picture வினா, Paragraph வினா, Rough Copy கேள்வி


அறிவியல் ஒரு மதிப்பெண், படம் பாகம் 


ச. அறிவியல் மேப் , காலக்கோடு, 1 மதிப்பெண்


கணிதம்


கிராஃப் - 30 கணக்கு

ஜியாமட்ரி - 25 கணக்கு

one mark - புரிதல் இல்லாம a/ b/ c/ d என மனப்பாடம் 

கடின வினா அமைப்பு


இவ்வளவு செய்தும் எல்லா பாடத்தை விட குறைவான தேர்ச்சி விகிதம் .


இதில் Average வேறு கதை.


சரி என்ன தான் செய்யலாம்?

formula னா எழுத வைக்கலாம் என முயற்சி செய்தால் அதிலும் அவ்வளவு பிழை

ஒவ்வொரு முறை பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் போதும்  கணித ஆசிரியனாய் தோற்று போவது கடக்க முடியாமல் கடக்கிறது.


கணித கருத்துகள் புரிந்து


படிநிலைகள் கற்று


புரிதலோடு தீர்வு கண்டு


புது புது வழிமுறைகளை கண்டறிந்து


கணிதத்தை மகிழ்வோடு வரவேற்கும் மாணவர்கள் அவர்களை ஈடுபடுத்தும் பாடத்திட்டமும் உருவாக வேண்டும் என்ற ஆசையில் ...


தினம் கரும்பலகை சாக்பீசோடு கனவுகளையும் சேர்ந்து சுமக்கும் ஓர் கணித ஆசிரியன் ...


கணித ஆசிரியர்கள் மாஸ்டர்களாய் தலை நிமிர போவது எப்போது ?

கணித பாடம் தான் பிடிக்காத பாடம் என்ற நிலை மாறாமல் மேலுமாய் அழுத்தமாய் நீண்டு வருகிறது..


கணிதம் கற்கண்டாகும் ! எப்போது ? ...


அதிக மன அழுத்தம் கொண்ட ஆசிரியர் என மருத்துவ பரிசோதனை செய்தால் அதில் கணித ஆசிரியர்கள் முதலில் நிற்பார்கள்.


நிலை மாறும் நம்பிக்கையில் ....


Post Top Ad