மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கு - அரசு முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 10, 2022

மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கு - அரசு முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

 



ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது. பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளது. 


விடுப்பு கோரி மனுதாரர் கடந்த ஜூன் 27ம் தேதி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவரது  விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Post Top Ad