வானவில் மன்றங்கள் (STEM திட்டம்) எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 28, 2022

வானவில் மன்றங்கள் (STEM திட்டம்) எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்?

 




தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்?


அறிவியல் சிந்தனையை செழிப்பாக்க  பள்ளிகளில் வருகிறது வானவில் மன்றங்கள்


STEM என்பது Science, Technology, Engineering, Mathematics என்பதன் கூட்டு தொகுப்பாகும். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம், பொறியியல்,கணிதம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை கொண்டதான ஒரு கற்றல் செயல் திட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை நான்கின் தாக்கங்களும் இன்றி வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளோம். அறிவியல் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், தொழில்நுட்பமும், பொறியியலும் மனித வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளின் அம்சமாகவும் உள்ளது.அது போலவே கணிதமும்.  இந்த  STEM திட்டத்தை அடிப்படையாக கொண்டு வானவில் மன்றங்களை தமிழ்நாட்டின் பள்ளிகளில் துவங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்க அம்சம். காலத்தே தேவையான முடிவு.


STEM திட்டத்தின் நன்மைகள்

1.மாணவ பருவத்திலேயே படைப்பாற்றல்,விமர்சனஅறிவு,அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சி சிந்தனை , தர்க்க  சிந்தனை, பகுத்தறியும் திறன் ,கூட்டு உழைப்பு ,புத்தாக்க சிந்தனை போன்றவற்றை வளர்த்தெடுக்க இத்திட்டம் உதவும்.


2. STEM என்பது திட்ட அடிப்படையிலான கற்றலை (project based learning) ஊக்குவிக்கிறது.


3.வகுப்பறை பாடங்களை செய்முறைகள் மூலம் கற்பது பாடங்களை, அறிவியல் விதிகளை புரிந்து கொள்வதை எளிதாக்கும்.


4.அறிவியல், தொழில்நுட்பம்,பொறியியல் ,கணிதம் ஆகிய துறைகளில் நுண்ணறிவை பயன்படுத்த இத்திட்டம் உதவும்.


5.அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த இக்காலத்திலும் அறிவியல் மனப்பான்மை (scientific temper)  குறைந்து வருகிறது.அறிவியல் மனப்பான்மையை மாணவ பருவத்திலேயே வளர்த்தெடுப்பது.. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு விடை தேடும் சமூகத்தை உருவாக்க இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.


6.இயற்பியல் ,வேதியியல் கணிதம் போன்ற அடிப்படை  அறிவியல் (fundamental science) பாடங்களை கற்க மாணவ மாணவிகள் மத்தியில் தற்காலத்தில்  ஆர்வம் குறைந்து வருகிறது.அடிப்படை அறிவியல் பாடங்களின் மீதான பயம் அதிகரித்துள்ளது.காரணம் பாடங்களை புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே . இந்நிலையை போக்க STEM திட்டமும் அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வானவில் மன்றங்களும் உதவும்



Post Top Ad