ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட்; அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை - முதலமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 21, 2022

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட்; அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை - முதலமைச்சர் அறிவிப்பு

 


மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. ஒன்றிய அரசின் திட்டங்கள், மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,


கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியம்:


எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம். கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. ஆதி திராவிடர்கள் 50 சதவீதத்துக்கு மேல் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டத்தின் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பொதுவினியோக திட்டத்தின் மூலம் பட்டினியின்மை:


தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பட்டினியின்மை என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்க ஆணையிட்டுள்ளது என்று தெரிவித்தார்.  


வளர்ச்சிப்பணிகளை விரைந்து நிறைவேற்றுக:


வளர்ச்சிப்பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்பு திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.


அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை திட்டம் அமல்:


அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகள் நவீனமயக்கப்பட்டு வருகிறது எனவும் முதலமைச்சர் கூறினார்.


பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது;


பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வளர்ச்சி தீர்மானிக்கப்படாது; மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சியை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பொதுமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் முதலைச்சர் கூறினார்.


Post Top Ad