GO -144 - ஆசிரியர் நியமனங்களுக்கு வயது உச்ச வரம்பு அதிகரித்து அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 20, 2022

GO -144 - ஆசிரியர் நியமனங்களுக்கு வயது உச்ச வரம்பு அதிகரித்து அரசாணை வெளியீடு

 

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும் , மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியீடு




1. அரசாணை ( நிலை ) எண் : 12 , 

பள்ளிக் கல்வி ( தொ.க .1 ( 1 ) த் துறை , நாள் 30.012020 


2. அரசாணை ( நிலை ) எண் .13 , 

பள்ளிக் கல்வி ( பக 3 ( 1 ) த் துறை , 

நாள் 30.012020.


3. அரசாணை ( நிலை ) எண் .14 , 

பள்ளிக் கல்வி ( பக 2 ( 1 ) த் துறை , 

நாள் 30.01.2020 


4. பள்ளிக் கல்வி ஆணையரின் 

கடித ந.க.எண் .57345 / W3 / S1 / 2019 , 

நாள் 29.09.2021 


ஆணை : மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . 

அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .


2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி 2 நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட அறிவிக்கையில் , ஆசிரிய பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . 

3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது . 


மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 


 4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் . 


எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் . 


5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது :. (தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது . 


( i ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09,2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் . 


( ii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31 : 12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . 


(iii). இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் . 


( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது .


Click Here to Download - GO-No-144-TRB-Age-Relaxation - Pdf


Post Top Ad