TNTET Paper 1 - ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வுக்கு புதிய தேதி அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 23, 2022

TNTET Paper 1 - ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வுக்கு புதிய தேதி அறிவிப்பு

 




ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியின் படி 10.09.2022 முதல் 15,09.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ற்கான தேர்வு 03.09.2022 பத்திரிகைச் செய்தியின் படி நிருவாக காரணங்களினால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது தேர்வுகள் 14.10.2022 தேதி முதல் 2010.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட உள்ளது.


 மேற்படி கணினி வழித் தேர்வுக்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit Card ) வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

நாள் : 23.09.2022 தலைவர்




Post Top Ad