அரசுப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் தொடக்கம் - தமிழக அரசு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 14, 2022

அரசுப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் தொடக்கம் - தமிழக அரசு

 




பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விரைவில் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின.


முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி பள்ளிகளில் காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடக்கிவைக்கவிருக்கிறார்.


முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த மே மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் ஐந்து முக்கிய திட்டங்களை அறிவித்தார்.


அவர் வெளியிட்ட ஐந்து முக்கிய திட்டங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்ல் என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தொலைவில் இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.


இதனை மனதில் வைத்து காலை சிற்றுண்டி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூரக் கிராமங்களில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி அளிக்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.






Post Top Ad