ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு - கல்வித்துறை அதிரடி திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, July 25, 2022

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு - கல்வித்துறை அதிரடி திட்டம்

 





வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் ஆப் மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே 2019ம் ஆண்டு பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆப் அறிமுகமாக உள்ளது.




மேலும் பள்ளிகல்வித்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் புதிய ஆசிரியர் நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது.  அதில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன் பள்ளிக்கு வர வேண்டும், பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவர வேண்டும், வகுப்பறை பற்றாக்குறையின் காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினாலோ மரத்தடியில் வகுப்பு நடத்தக்கூடாது, பேருந்தில் வரும் மாணவர்கள் பேருந்தில் மேற் கூரையில் அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்க கூட்டத்தில் தக்க அறிவுரைகள் தலைமை ஆசிரியரால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், ஆசிரியர்கள் வருகை தந்த உடன் வருகை பதிவேட்டை தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு வைக்க வேண்டும் போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் பள்ளிகள் பொதுமக்களிடையே உறவு நன்றாக இருக்க வேண்டும், பள்ளியில் கழிப்பறை வசதி குடிநீர் வசதி உள்ளதா அவை சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும், மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது, நூலகத்தை பயன்படுத்தும் மாணவர்களின் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும், ஆசிரியர்கள் பள்ளியின் வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும், பள்ளி ஆய்வின் போது ஆசிரியர் செல்போன் பேசிக் கொண்டிருந்தார் என்றால் அந்த ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை, பள்ளியில் பயிலும் மாணவர்களை எக்காரணத்திற்கு கொண்டு ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளிய அனுப்ப கூடாது போன்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.




Post Top Ad