ITK - Reading Marathon முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு திட்ட அலுவலர் இளம்பகவத் அவர்கள் விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 16, 2022

ITK - Reading Marathon முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு திட்ட அலுவலர் இளம்பகவத் அவர்கள் விளக்கம்

 





ரீடிங் மரத்தான் முடிவுகள் 

ரீடிங் மாரத்தான் முடிவுகளில் பிளாக் கோட் சரியாக பொருந்தவில்லை என்று புகார் தெரிவித்து இருந்தீர்கள்.‌


இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது சரி செய்ய கோரப்பட்டது.


தற்பொழுது சரி செய்யப்பட்ட பிளாக் குறியீடுகளுடன் ரீடிங் மாரத்தான் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 


இதன்படி முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.


1) ரீடிங் மரத்தான் கோப்பையை 6.28 கோடி சொற்களை வாசித்து லால்குடி வட்டாரம்  வென்றெடுத்து உள்ளது. அலங்காநல்லூர் மற்றும் மேலூர் வட்டாரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன. 


2) ஒரு மாவட்டத்தில் பதிவு செய்துள்ள இல்லம் தேடி கல்வி மாணவர்கள் வாசித்த சொற்களுக்கான சராசரி அடிப்படையில் 1944. 80  திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ரீடிங் மாரத்தான் மாணவர் கோப்பையை திருப்பத்தூர் மாவட்டம் தட்டிச் செல்கிறது. 


2) மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் எண்ணிக்கை மற்றும் வாசிக்கப்பட்ட சொற்களின் சராசரி அடிப்படையில் 36711.09 சொற்களுடன் மதுரை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ரீடிங் மாரத்தான் தன்னார்வலர்கள் கோப்பையை மதுரை மாவட்டம் பெறுகிறது. 


3) தன்னார்வலர்களின் செயல்பாடு மாணவர்களின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வட்டாரங்களின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ரீடிங் மாரத்தான் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை மதுரை மாவட்டம் வென்று எடுத்துள்ளது. 


ரீடிங் மாரத்தானில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது அயராத முயற்சியின் காரணமாக நம் மாணவர்கள் உலக அளவிலான சாதனையை படைத்துள்ளார். 


ரீடிங் மாரத்தானில் மாணவர்களை ஊக்கப்படுத்தி ஈடுபடுத்திய தன்னார்வலர்களுக்கும்  கூகுளே பிரமிக்கத்தக்க வகையில் பெரும் சாதனை நிகழ்த்திய நமது அன்பு குழந்தைகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




விரைவில் ஒரு முக்கிய நிகழ்வில் ரீடிங் மரத்தான் கோப்பையை தமிழ்நாட்டின் முக்கிய தலைவர் வெற்றி பெற்ற வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வழங்குவார். 




அனைவருக்கும் வாழ்த்துகள்.


💐💐💐💐💐💐💐💐💐


அன்புடன்,


க. இளம்பகவத்,

சிறப்புப் பணி அலுவலர்,

இல்லம் தேடிக் கல்வி.

Post Top Ad