பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 9, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 

திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது,

 

கல்வியின் தேவையை உணர்ந்து, கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.


தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை செயல்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. அதை சரி செய்யக்கூடிய முயற்சியில் தமிழக முதல்-அமைச்சர் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை சரி செய்யப்பட்ட பின் பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Post Top Ad