TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 16, 2022

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

 




தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தற்போது இதற்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிய உள்ளதால் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.



ஆசிரியர் தகுதி தேர்வு


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசு ஆசிரியராக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. மேலும் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அதனால் சில சமயங்களில் சர்வர் பிரச்சனை காரணமாக விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவி வந்தது. இதனை தொடர்ந்து பி.எட் முதலாம் ஆண்டு படித்த 50 ஆயிரம் பேருக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அத்துடன் இவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத ஒரு வாய்ப்பு வேண்டும் என்று விரும்புகின்றனர்.


மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பபிக்க மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைவதால் மேலும் சில நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். அதனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மேலும் சில காலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Post Top Ad